
தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி, தங்களை அணுகி கோடி கணக்கில் பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசியதாக எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக, அமமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசிய சையத் பாரூக் பாஷா, கொள்கைக்காகவே தாங்கள் அந்தப் பணத்தையும் பதவியையும் நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.