
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 4 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி. நாகராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இரவு 8:00 மணிக்கு சோதனை நிறைவடைந்த நிலையில், குறிப்பிடத்தக்க ஆவணங்களோ அல்லது பணமோ பிடிபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.