
வணிக காப்பீட்டு சேவைகளை விரிவுபடுத்த பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் சுவிஸ் ரீ கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்தக் கூட்டணியின் மூலம் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு சிறப்பு காப்பீட்டு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் சந்தை அனுபவமும், சுவிஸ் ரீ நிறுவனத்தின் இடர் மேலாண்மை நிபுணத்துவமும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.