
2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே மிகப்பெரிய டெவலப்பர்களைக் கொண்ட மையமாக இந்தியா உருவெடுக்கும் என்று மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
சியாட்டில் நடைபெற்ற 'IDEAS4INDIA' என்ற தொழில்நுட்ப சிஇஓக்களின் மாநாட்டில் அவர் இந்த முக்கியக் தகவலைக் கூறினார்.
இந்தியாவில் கிளவுட் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்காக 2026 முதல் 2029 வரை 17.5 பில்லியன் டாலர்களை மைக்ரோசாப்ட் முதலீடு செய்யவுள்ளது.