
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா ஏவிய ட்ரோன்களில் சுமார் 90 விழுக்காட்டை உக்ரேனிய வான்படை சுட்டு வீழ்த்திய போதிலும், குடியிருப்புகள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கடுமையாகச் சேதமடைந்தன.
மேற்கத்திய நாடுகள் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உரிய நேரத்தில் வழங்கத் தவறியதே இந்த உயிர் இழப்புகளுக்குக் காரணம் என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.