
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.