
'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று காலை காலமானார்.
பொற்காலம் (1997) திரைப்படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெற்றுள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் நாளை (அக்டோபர் 23) நடைபெறவுள்ளது.