
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், திட்டமிட்ட காலத்திற்கு முன்பாக நவம்பர் 29 அன்று பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
அரசு கொண்டு வந்த வீட்டு வாடகை மற்றும் வீட்டு வசதி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால், மக்களிடம் நேரடியாக புதிய ஆதரவை பெற தேர்தலை சந்திக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.