
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
வட சென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இப்படத்தில் சிலம்பரசன் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார், மேலும் அமீர் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் உள்ளனர்.