
முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2027 உலகக்கோப்பைக்கான தனது உத்தேச அணியில் புவனேஸ்வர் குமாரை மீண்டும் தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ரிஷப் பண்ட், முகமது ஷமி, சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய முன்னணி வீரர்களை அஸ்வின் தனது உத்தேச அணியில் இருந்து புறக்கணித்துள்ளார்.
புவனேஸ்வர் குமார் 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார்.