
நடிகர் வருண் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொரியன் கனகராஜு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மெர்லபாகா காந்தி இயக்கியுள்ள இப்படம் இந்திய - கொரியன் பாணியிலான நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஸன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் தமன் இசையமைத்துள்ளார்.