
நாகப்பட்டினத்தில் சுகன் என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 135 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.270 கோடிக்கு மேல் என்று கூறப்படும் நிலையில், இந்த வழக்கில் பூபாலன், சுகன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வெளியிட்ட டிவி நிருபர்களை தவெக நாகை நகரச் செயலாளர் பாலு வாட்ஸ்அப் காலில் மிரட்டியது குறித்து நாகை எஸ்பியிடம் புகாரளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.