/polimer-news/media/media_files/2026/11/02/mkstalin-2026-11-02-11-51-10.jpg)
ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தமிழகத்தின் வளர்ச்சி உள்ளதாகவும், தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
த.வெ.க. அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதலீடுகளை ஈர்த்த TN Guidance அமைப்பு தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்குக் காவு கொடுக்கப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லாத் துறைகளும் வேகமாகப் பின்னோக்கிச் செல்வதாகவும், முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.