
1993-ல் அறிமுகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சேவையில் (பி.எம்.எஸ்), முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட முதலீட்டு வழிகளை அறிமுகப்படுத்த செபி கருத்துக்கேட்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பி.எம்.எஸ் துறையில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2,19,000 ஆகவும், மேனேஜர்கள் எண்ணிக்கை 515 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில், கடல் கடந்த முதலீடுகளுக்கும் அனுமதி வழங்க செபி ஆலோசித்து வருகிறது.
பி.எம்.எஸ் திட்டங்களில் கட்டணங்கள் 0.25% முதல் 2.5% வரை மாறுபடுவதோடு, பங்கு சார்ந்த திட்டங்களில் நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளை விட அதிகமாக இருக்கலாம்.