
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்ற விநியோகஸ்தர்களின் முடிவைக் கண்டித்து, செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவால், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 250 படங்கள் வெளியாகும் நிலையில், தயாரிப்பாளர்களுக்கு ரூ.700 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுவதால், இந்த விவகாரத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.