
கெய்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் அணி சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் அமெரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா, வெண்கலப் பதக்கத்தை வென்றது.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் வரலாற்றில் இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக இரண்டு முறை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
பெண்கள் பிரிவில் இந்திய அணி காலிறுதியிலேயே அமெரிக்காவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது, ஆடவர் இறுதிப்போட்டியில் அமெரிக்கா மற்றும் எகிப்து அணிகள் மோதுகின்றன.