
2025-26-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) வட்டியாக 34 கோடி சந்தாதாரர்களுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு, தற்போது சந்தாதாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
வட்டி வரவு வைக்கப்படாத சந்தாதாரர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும், அடுத்த சில நாட்களில் வட்டி வரவு வைக்கப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.