
வேலைச்சுமை, மரபணு காரணங்கள், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மற்றும் வாழ்வியல் சூழல் மாற்றங்களால் மன பதற்றம் ஏற்படுகிறது.
இந்தப் பதற்றத்தைத் தடுக்க மூச்சுப்பயிற்சி செய்வது நரம்புகளை அமைதிப்படுத்த உதவுவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடலின் மன அழுத்த ஹார்மோன் குறையும்.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம் எனவும், துரித உணவுகளைக் குறைத்து சத்தான உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.