
31-வது பெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியானாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை குஷி காடியன் ஒரே தொடரில் 3 பட்டங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
16 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஞ்சனா சங்கராமை 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கிலும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சித்தி பாண்டேவை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கிலும் வீழ்த்தினார்.
இதற்கு முந்தைய நாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சன்மிதா ஹரிணியுடன் இணைந்து மகளிர் 16 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவிலும் அவர் பட்டம் வென்றிருந்தார்.