
பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தில் பி.எல்.ஏ எனப்படும் பலுாச் விடுதலைப் படையினர் பல பகுதிகளைக் கைப்பற்றியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கேச் மாவட்டத்தில் உள்ள மாண்ட் நகரை ஆயுதங்களுடன் சென்று கைப்பற்றிய பி.எல்.ஏ வீரர்கள், சாலைகளை மறித்து வாகனங்களை தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுடன் எந்தப் பேச்சும் நடத்த முடியாது என்றும், பி.எல்.ஏ அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பலுாசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி எச்சரித்துள்ளார்.