
புலிகள் காப்பகத்திலிருந்து மலைக்கிராம மக்களை வெளியேற்றக்கூடாது என வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 98 மலைக்கிராமங்களை புலிகள் காப்பகமாக அறிவித்ததை எதிர்த்து, விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.
போராட்டத்தின் முடிவில் ஆட்சியர் இரா.வைத்தியநாதனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது, மேலும் இந்த போராட்டத்தால் தேனி-மதுரை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.