
சீனாவில் நடைபெற்று வரும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு பிரிட்டனின் சோனே கர்தால் முன்னேறியுள்ளார்.
அரையிறுதிச் சுற்றில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவை எதிர்கொண்ட சோனே கர்தால் 7-6 (11-9), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
டென்னிஸ் தரவரிசையில் 170-வது இடத்தில் இருந்த சோனே கர்தால், இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியன்களை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.