
சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தனவிமல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தான் கொடுத்த ரூ.4.50 கோடியில் ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பித் தரப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், செப்டம்பர் 10-ம் தேதி மனுதாரரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு, செப்டம்பர் 15-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.