
நமீபியா தலைநகர் விந்தோக்கில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்த நிலையில், ஜிம்பாப்வே 18.1 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
ஜிம்பாப்வே வீரர் இன்னசண்ட் காலா 42 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.