
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிக்கும் மாணவி அளித்த பாலியல் மற்றும் அவதூறு புகாரின் அடிப்படையில் வேதியியல் துறைத் தலைவர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 15-ம் தேதி துறை அலுவலகத்திற்குச் சென்ற மாணவியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து துறைத் தலைவர் அவதூறாகப் பேசி தகாத வார்த்தைகளால் திட்டியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் ராஜேந்திரனை தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.