
டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆகஸ்ட் 7 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் மது முன்பதிவு திட்டத்திற்கு, மதுப்பிரியர்களிடையே மிகக் குறைந்த அளவே வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் ரூ.11.62 லட்சமும், இரண்டாவது நாளில் 3 ஆயிரம் முன்பதிவுகள் மூலம் ரூ.9 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது நாளில் டாஸ்மாக் கடைகளின் மொத்த விற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.