
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அழுத்தம் கொடுக்காமல், அவரது இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்க வேண்டும் என அஜிங்கியா ரஹானே வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் நடந்த 3 டி20 போட்டிகளில் சூர்யவன்ஷி முறையே 13, 15 மற்றும் 14 ரன்களை மட்டுமே எடுத்து விமர்சனங்களுக்கு உள்ளானார்.
ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டவை என்றும், நாட்டிற்காக விளையாடும்போது அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் ரஹானே தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.