
ஜப்பானில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் டி35 ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பிரீத்தி பால் 29.53 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார், சீன வீராங்கனை சோ சியா தங்கப் பதக்கம் வென்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு இதே பிரிவில் நான்காவது இடம் பிடித்த பிரீத்தி, இந்த முறை 2.66 விநாடிகள் வேகமாக ஓடி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.