
சீனாவின் ஷென்செனில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில், இந்தியாவின் லக்சயா சென் கனடாவின் விக்டர் லாயிடம் 14-21, 7-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கடாம்பி ஸ்ரீகாந்த், தைவான் வீரர் சி யூ ஜென்னை 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிராஸ்டோ இணை வெற்றி பெற்று, தொடரின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.