
தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி போராடிய விவசாயிகளைக் கைது செய்ததற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக 1,500 கனஅடி தண்ணீரை அணையிலிருந்து திறந்துவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.