
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தொடர்ச்சியாக ஏற்படும் காயங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், வீரர்களின் பயிற்சி முறைகளில் தவறு இருப்பதாகக் கூறியுள்ளார்.
பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் காயமடைவது அணித் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், பிசிசிஐ இதனை தீவிரமாக ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயிற்சியின் போது பந்துவீச்சாளர்கள் 20 பந்துகளுக்கு மேல் வீசக்கூடாது என்ற பயோமெக்கானிக்ஸ் விதிகள், போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்குப் போதுமானதாக இல்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.