
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால், சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரான்சில் முதல்முறையாக 'Fire Cloud' எனப்படும் அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பலத்த காற்று மற்றும் மின்னல் உருவாகி தீ வேகமாகப் பரவி வருகிறது.
வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவசரகால உதவிகளை வழங்கி வருகின்றனர்.