
பொலிவியாவில் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 14 வீரர்களைத் தேடும் பணி 2-வது நாளாகத் தொடர்கிறது.
விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 14 வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
தகவல் கிடைக்காததால் ஆத்திரமடைந்த வீரர்களின் உறவினர்கள், முகாமிற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.