
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான கூடுதல் தள்ளுபடியை இன்று (17.8.2026) சட்டமன்றத்தில் அறிவித்தார்.
ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடியும், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரையும், அதற்கு மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த கூடுதல் தள்ளுபடியால் அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், மொத்தம் 13.34 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,220 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.