
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபல எஸ்.யு.வி கார்களுக்கு 2026 ஆகஸ்ட் மாதத்தில் ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் இலவச அக்சஸரீஸ் என அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த சலுகையின் கீழ் ஸ்கார்பியோ N மாடலுக்கு ₹1.25 லட்சம் வரையும், தார் ராக்ஸ் மாடலுக்கு ₹1.20 லட்சம் வரையும், தார் மாடலுக்கு ₹50,000 வரையும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை 1.6% முதல் 2.5% வரை உயர்த்திய நிலையில், இந்த ஆகஸ்ட் மாத தள்ளுபடிகள் வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைக்கும்.