
கிராமப்புற மக்களுக்கு 125 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க ரூ.9,192 கோடி தேவைப்படும் நிலையில், தமிழக அரசு ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
தேவைப்படும் நிதியில் இது 1.08 விழுக்காடு மட்டுமே என்பதால் பயனாளிகளுக்கு ஒரு நாளைக்குக் கூட வேலை வழங்க முடியாது எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்து வருவதால், தமிழ்நாட்டில் ஊரக வேலைவாய்ப்பை வழங்குவதில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.