
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் வழக்கத்தை விட 13 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது.
சிட்னி நகரில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால், கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, சிட்னி முழுவதும் நெருப்பு மூட்டுவதற்குத் தீயணைப்புத் துறையினர் அதிரடியாகத் தடை விதித்துள்ளனர்.