
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாநில சுகாதாரத் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழிப்புணர்வு இன்மை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தொற்றைத் தடுக்க அனைத்துக் கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மற்றும் பரிசோதனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தனிநபரின் ஒப்புதல் இன்றி பரிசோதனை செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.