
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பும்ராவுக்கு ஏற்பட்ட இந்த காயம் காரணமாக அவர் விலகியதை அடுத்து, அவரது பந்துவீச்சு நுட்பத்தை முன்னாள் வீரர் ராஜ் குல்கர்னி விமர்சித்துள்ளார்.
பும்ராவின் விசித்திரமான பந்துவீச்சு முறை உடலுக்கு அதிக அழுத்தம் தருவதால், அவரை முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என ராஜ் குல்கர்னி ஆலோசனை வழங்கியுள்ளார்.