
பிரான்சில் நடந்துவரும் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு கார்லோஸ் அல்காரஸ் மற்றும் பென் ஷெல்டன் முன்னேறியுள்ளனர்.
அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் லூகா வான் ஆஷை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.