
2026 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான 3 மாத காலத்தில், அமெரிக்காவிலிருந்து 414 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 174 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர், இதில் இங்கிலாந்து 57 மற்றும் சைப்ரஸ் 53 பேரை திருப்பி அனுப்பியுள்ளன.
மொத்தமாக 588 இந்தியர்கள் இந்த 3 மாத காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.