
நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒகாரி ஜெட்டி பகுதியில் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
200-க்கும் மேற்பட்டோர் எண்ணெய் குழாயில் திருட முயன்றபோது, உயர் அழுத்தத்தில் வெளியேறிய நச்சுப் புகையை சுவாசித்ததால் பலர் மயங்கி விழுந்து ஆற்றில் மூழ்கியதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நைஜர் டெல்டா பகுதியில் நீண்டகாலமாக நிலவும் இத்தகைய சட்டவிரோத எண்ணெய் திருட்டு நடவடிக்கைகள், தீ விபத்துகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.