
திரைப்பட வாய்ப்புகளைத் தேடி 1968-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னைக்கு வந்தபோது, சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாமல் தானும் அண்ணன் பாஸ்கர் மற்றும் பாரதிராஜா மூவரும் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழாவின்போது வடபழனி கோவில் எதிரே உள்ள கடைகளில் வழங்கப்பட்ட பொரி, கடலை, சுண்டல் ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்டு பசியாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் கடந்த கால பட்டினி அனுபவத்தை நினைவில் கொண்டு, நவராத்திரி நேரத்தில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக தன் மனைவி ஜீவா வீட்டில் அன்னதானம் மற்றும் இசை நிகழ்ச்சிகளைத் தொடங்கினார் என்று அவர் கூறியுள்ளார்.