
இத்தாலியின் அட்ரியாடிக் கடலில் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நீல நண்டுகளைக் கட்டுப்படுத்த, 1.30 லட்சம் குட்டி ஆக்டோபஸ்கள் விடப்பட்டுள்ளன.
போலோனியா பல்கலைக்கழகம் மற்றும் எமிலியா-ரோமாஞா பிராந்திய அரசு இணைந்து செயல்படுத்தும் 'ஆக்டோ-புளூ' திட்டத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ந்த ஒரு ஆக்டோபஸ் ஒரு நாளைக்கு சுமார் 4 நடுத்தர அளவிலான நீல நண்டுகளை உண்ணும் என்பதால், கடல் சூழலியல் சமநிலை மீட்கப்படும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.