
அக்டோபர் 3-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா-பிரேசில் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் ரூ.1,000 மற்றும் ரூ.5,000 விலையிலான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.
5 முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி பங்கேற்கும் இந்தப் போட்டி, இந்திய கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.