
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன், வண்ணாந்துறை பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளைக் கண்டறிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட கண்ணன் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.