
வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.