
மேஜர் லீக் கால்பந்து போட்டியில் இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இன்டர் மயாமி அணிக்காக ஜெர்மன் பெர்டெராமே ஒரு கோலும், மெஸ்ஸி 2 கோல்களும் அடித்து வெற்றிக்கு உதவினர்.
நடப்பு சீசனில் 25 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, ஒட்டுமொத்த கால்பந்து வரலாற்றில் 936 கோல்களை அடித்துள்ளார்.