
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் மனிதகுலத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட கருத்துகள் குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடே விளக்கம் அளித்துள்ளார்.
நாம் சரியான பாதையைத் தேர்வு செய்தால் தவறான நிலைக்குச் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டை தவறான நபர்கள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க நாம் மெதுவாகச் செயல்படாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.