
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் சக வீரர் ஜோம் மூனாருடன் மோதிய அல்காரஸ், முதல் செட்டை இழந்தாலும் அடுத்தடுத்த செட்டுகளை 6-3, 6-1 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் கார்லோஸ் அல்காரஸ், செக் குடியரசின் ஜிரி லெஹேகாவை எதிர்கொள்கிறார.